Wednesday, March 04, 2009

S o M e F u N

ரிவர்ஸ் கியரும் சர்தார்ஜியும்
சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.

அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?

சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?

அப்பர் பெர்த்தில் சர்தார்ஜி
சர்தார்ஜி: "அப்பர் பெர்த்திலே வந்ததாலே இராத்திரி முழுக்க தூங்கவே முடியலை"

சர்தார்ஜியின் மனைவி: "லோயர் பெர்த்திலே இருந்தவங்க கிட்டே சொல்லி மாத்தியிருந்திருக்கலாமே?"

சர்தார்ஜி: "லோயர் பெர்த்துலேதான் யாரும் இல்லையே! எப்படி மாத்தியிருக்க முடியும்?"

'ரயிலைப் பிடிக்கணும்'
வாடிக்கையாளர் ஒருவர் சர்தார்ஜியின் கடையில் "சீக்கிரம் ஒரு பேக் கொடுங்க. ரயிலைப் பிடிக்கணும்"

சர்தார்ஜி: "ஐயோ, அவ்வளவு பெரிய பேக் நம்மகிட்ட இல்லைங்க"

ஆறாவது மாசம்
இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.

சர்தார்ஜி: அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.

சர்தார்ஜியும் சர்வரும்
நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார்.

கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார்: "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்....." என்று சொல்ல,

குழம்பிப்போன சர்வர் கேட்டார்: "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"

நம் சர்தார்ஜி சொன்னார்: " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"

கண்ணாடிக் கடையில் சர்தார்ஜி
சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க...

கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..

சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க

கொசு மருந்துடன் சர்தார்ஜி
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

ஹோட்டலில் சர்தார்ஜி
சர்தார்ஜி: ஒரு காபி எவ்வளவு?

ஹோட்டல் ஓனர்: 5 ரூபா

சர்தார்ஜி: எதிர்த்த கடையில ஒரு காபி 35 பைசான்னு போட்டிருக்கு...

ஹோட்டல் ஓனர்: யோவ்...! அது ஜெராக்ஸ் காபி.

மாடி பஸ்சில் சர்தார்ஜிகள்
சென்னைக்கு வந்த சாண்டா சிங்கும் பாண்டா சிங்கும் மாடி பஸ்சில் ஏறினார்கள். சாண்டா சிங் கீழ்த்தளத்தில் இருக்க, பாண்டா சிங் மேல் தளத்தில் இருந்தான். அரைமணி நேரம் கழித்து மேலே சென்ற சாண்டா சிங் தனது நண்பன் முகம் வெளிறி, மிகவும் பயந்திருப்பதைக் கண்டான்.

'ஏய் பாண்ட! என்ன ஆச்சு? ஏன் பயந்து போயிருக்கே? நான் கீழ்த்தளத்தில் ஜாலியாக மாடி பஸ் பயணத்தை ரசித்தேன்''

நீ ஏன் ரசிக்க மாட்டே! கீழ்த்தளத்தில் டிரைவர் இருக்கார். ஆனா இங்கே டிரைவர் இல்லாம வண்டி எங்கேயாவது போய் முட்டிக்கிடுமோன்னு பயந்து போயிருக்கேன்'

No comments:

Energy Saver